47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தெலுங்கில் வரவேற்பைப் பெரும் மஞ்ஞுமல் பாய்ஸ்!

மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் தெலுங்கில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2024, 9:53 am

DIN


கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.

முதல்வாரத்தில் கவனம் பெற்ற இப்படம் இதுவரை தமிழகத்தில் 500 திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மலையாள சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு மலையாளப் படம் தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும், மலையாள சினிமா வரலாற்றிலேயே ரூ. 200 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற சாதனையைப் அடைந்த மஞ்ஞுமல் பாய்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

Story image

தற்போது, தெலுங்கிலும் இப்படம் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருவதால், அங்கும் பெரிய வசூலைக் குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.