குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

10 வருட கனவு: நடிகர் பிரதீப் ரங்கநாதன் அறிவித்த புதிய படம்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் புதிய படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.

Published On :10 ஏப்ரல் 2024, 8:04 pm IST

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் நடிகராவும் அசத்தி வருகிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கவுள்ளார். 

இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்திற்குப் பின் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இதனை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது ஏஜிஎஸ்-இன் 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது. இதில் நானும் சீனியருமான அஸ்வத் மாரிமுத்தும் இனைந்து படம் எடுக்க வேண்டுமென 10 வருடங்களுக்கு முன்பே முடிவு செய்தோம். அவர்தான் என்னை கேமிராவில் படம் பிடித்து அழகாக இருக்கிறாய் என்றார் என பிரதீப் கூறியுள்ளார்.

விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுமென பிரதீப் இந்த விடியோவில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.