தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெற்றி பெற்ற மங்காத்தா திரைப்படம் மே மாதம் மறுவெளியீடாகிறது.

Published On :

கடந்த 2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், அர்ஜூன், த்ரிஷா நடிப்பில் உருவான திரைப்படம் மங்காத்தா.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028, சரோஜா, கோவா என்று வரிசையாக அனைத்து படங்களும் ஹிட் அடித்து அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த நடிகர் அஜித்துக்கு மங்காத்தா படம் பெரும் ‘கம்பேக்’காக அமைந்தது. அதற்கு காரணம் அஜித்தின் கதாபாத்திரமும், பின்னணி இசையும் தான்.

தொழிலதிபரின் கணக்கில் வராத பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் காவல் ஆய்வாளர் விநாயக் மகாதேவனாக கலக்கியிருப்பார் அஜித்.

கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் மங்காத்தா.அஜித் வரும் காட்சிகள் முழுவதும் பின்னணி இசையில் யுவன்சங்கர் ராஜா அதிர வைத்திருப்பார். இன்றைக்கும் மங்காத்தா படத்தின் பின்னணி இசைக்கு பெரும் ரசிகர்கள் உண்டு.

Story image

விடா முயற்சி திரைப்படத்தின 90 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மே.1ஆம் நாள் மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவிருக்கிறது. அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.