தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின்.
இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.
மேலும், நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தாக லியோவிலும் சிறப்பாக நடித்திருந்தார்.

மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் துவங்கி நடைபெற்று வருவகிறது.
நடிகர் விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘ட்ரெயின்' (train) எனப் பெயரிட்டுள்ளனர். கலைப்புலி எஸ். தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார்
ட்ரெயின் படத்தின் நாயகியாக டிம்பிள் ஹயாதியும் முக்கிய கதாபாத்திரங்களில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ் , பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்காக ஒரு பாடலையும் பாடியுள்ளார் மிஷ்கின். இது மிஷ்கின் இசையமைக்கும் 2ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘பிசாசு - 2’ திரைப்படம் சில பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் டீசர்!

விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் டீசர் போஸ்டர்!
விஜய் சேதுபதி - புரி ஜெகன்னாத் கூட்டணியின் ஸ்லம் டாக்! டீசர் அறிவிப்பு!

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா... மீண்டும் ஒரு உண்மைச் சம்பவம்?
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK





