திருமணம் எப்போது? பிரியா பவானி சங்கர் பதில்!
நடிகை பிரியா பவானி சங்கர் தன் திருமணம் குறித்து பேசியுள்ளார்.


நடிகை பிரியா பவானி சங்கர் தன் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்த இவர், மேயாத மான் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, பத்து தல, ரத்னம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாது சென்னையில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

காதலருடன் பிரியா பவானி சங்கர்.
இவர் சில ஆண்டுகளாக ராஜ்வேல் என்பவரைக் காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று புகைப்படங்களை வெளியிடுவார்கள். இறுதியாக, ஆஸ்திரேலியாவில் இருக்கும் படங்களை வெளியிட்டனர். ஆனால், திருமணம் குறித்து கேள்விகளுக்கு இருவரும் கருத்து தெரிவிப்பதில்லை.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியா பவானி சங்கர், 2025-ல் தன் காதலரைத் திருமணம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால், இருவரும் அடுத்தாண்டில் திருமணம் செய்ய உள்ளது உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...