வாழை திரைப்படம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்..! ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் பாராட்டு!
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வாழை படம் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.


மாமன்னன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம்தான் வாழை. இந்தப் படம் சிறார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கலையரசன், நிகிலா விமல், எம். பொன்வேல், ஆர். ராகுல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இதன் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
நவ்வி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி ஹாட்ஸ்டார் இதனை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இந்தப் படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இந்தப் படம் உங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்தப் படம் உண்மையாக நடப்பவையை பிரதிபலிப்பதால் உங்களால் எதுவும் பேசமுடியாது. ஒவ்வொரு படமும் ஒரு கற்றல்தான் எனக் கூறியுள்ளார்.
வாழை போஸ்டர்.
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தமிழில் சைக்கோ படத்துக்கும் ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 (தொடர்), தெலுங்கில் லவ் மீ படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாயகன் படத்துக்காக தேசிய விருதை வென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...