

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்பட டிரைலர் ஒரேநாளில் யூடியூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இதில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.
நேற்று (ஆக.12) இயக்குநர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா டிரைலரை வெளியிட்டனர். வனத்திற்குள் வாழ்ந்த பழங்கால மனிதர்கள், அவர்களின் தோற்றம், போர்க்காட்சிகள் என பல இடங்களில் அனிமேஷன் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக, கங்குவா இரண்டாம் பாகத்தின் வில்லனாக நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த டிரைலரின் இறுதிக்காட்சியில் ஒரு கதாபாத்திரம் குதிரையில் வருகிறார். அவரைப் பார்த்து சூர்யா சிரிக்கிறார். இது, நடிகர் கார்த்தியாகவே இருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கங்குவா தமிழ் டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 20 மில்லியன் (2 கோடி) பார்வைகளைக் கடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.