வேட்டையன் முதல் பாடல் அப்டேட்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த மனசிலாயோ வசனத்தின் பெயரிலேயே வேட்டையனின் முதல் பாடல் உருவாகியுள்ளது. இதனை, 'தலைவர் நிரந்தரம்’ பாடலை எழுதிய சூப்பர் சுப்பு எழுதியுள்ளாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...