பா. இரஞ்சித்தின் அடுத்த படம் இதுதானாம்!
இயக்குநர் பா. இரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குநர் பா. இரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பா. இரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
கோலார் தங்கச் சுரங்கம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது. மாய எதார்த்தம் மற்றும் தங்கத்தின் மீதான ஆசையும் அதன் தொடர்ச்சியான துன்பமும் என புத்த குறியீடுகளை வைத்து காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருந்தனர்.
இப்படத்தைத் தொடர்ந்து, பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா - 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பா. இரஞ்சித் - நடிகர் சூர்யா கூட்டணியில், ’ஜெர்மன்’ என்கிற திரைப்படம் உருவாக உள்ளதாகவும் இதை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெர்மன் படத்தின் பேச்சுவார்த்தைகள் நீண்ட நாள்களாக கிடப்பில் இருந்தது. விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என இரஞ்சித் கூறியிருப்பது ரசிகர்களிடையே ஆவலை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...