மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கூலியில் அமீர் கான்?

நடிகர் ரஜினியுடன் அமீர் கான் இணைந்து நடிப்பதாகத் தகவல்.

News image

நடிகர்கள் அமீர் கான், ரஜினிகாந்த்.

Updated On :27 ஆகஸ்ட் 2024, 8:16 am


நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதற்கிடையே, படத்தின் இந்தியளவு வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருகிறதாம்.

இந்த நிலையில், கூலியில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அமீர் கான் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் திரைப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், கூலி படத்திற்கான தகவல் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.