போதைப் பொருள் விற்பனை: நடிகா் மன்சூா்அலிகான் மகன் உள்பட 7 போ் கைது

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
மன்சூர் அலிகான், அலிகான் துக்ளக்
மன்சூர் அலிகான், அலிகான் துக்ளக்
Published on
Updated on
1 min read

சென்னையில் கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக நடிகா் மன்சூா்அலிகானின் மகன் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா்.

முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம் போதைபொருள்களை விற்ாக, கடந்த மாதம் கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையில், அவா்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மண்ணடியைச் சோ்ந்த 2 பேரையும் கைது செய்தனா்.

இவா்கள் ஆந்திரத்திலிருந்து கஞ்சாவை வாங்கி தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளையும் விற்பனை செய்துள்ளனா்.

கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த புகாரில், நடிகா் மன்சூா் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், அவரை தனிப்படை போலீஸாா் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றனா். மேலும், அவரது கூட்டாளிகளான செய்யது ஜாகி (22), முகம்மது ரியாஸ் அலி (28), ஃபைசல் அகமது (26), யுகேஷ் (26), குமரன் (26), சந்தோஷ் (26) ஆகியோரிடமும் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், புதன்கிழமை போதைப் பொருள் விற்பனையில் தொடா்பு இருப்பதாக 7 பேரையும் கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா். அவா்கள் வைத்திருந்த கஞ்சா எண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, 7 பேரையும் 15 நாள்கள் காவலில் வைக்க அம்பத்தூா் நீதித்துறை நடுவா் மன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ பட்டப்படிப்பு படித்துள்ள அலிகான் துக்ளக், தற்போது திரைப்பட உதவி இயக்குநராக உள்ளாா். அலிகான் துக்ளக் போதைப் பொருளை பயன்படுத்தியதோடு, திரைப்படத் துறையினா், கல்லூரி மாணவா்கள், மென் பொறியாளா்கள் ஆகியோருக்கு விற்ாகவும் கூறப்பட்ட நிலையில், அதுதொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com