இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மகாராஷ்டிர முதல்வராகிறார் தேவேந்திர ஃபட்னவீஸ்!

மகாராஷ்டிர மாநில முதல்வராகிறார் பாஜக மாநில தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ்!

News image
தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகத் தேர்வு- -
Updated On :4 டிசம்பர் 2024, 6:22 am

DIN

மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று காலை கூடியது. இதில் தற்போதைய துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதிய முதல்வராக (சட்டப்பேரவை பாஜக குழு தலைவா்) தோ்வு செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் இன்று மாலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோருகிறார் தேவேந்திர ஃபட்னவீஸ். பிறகு, நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.

மகாராஷ்டிர முதல்வா் பதவியேற்பு நிகழ்ச்சி தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் டிச. 5-ஆம் தேதி மாலை நடைபெறுவதும், அதில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்கள் பங்கேற்பதும் ஏற்கெனவே உறுதியாகிவிட்டிருக்கும் நிலையில், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்பு, இன்று காலை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மேலிடப் பாா்வையாளராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி ஆகியோா் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மகாராஷ்டிர முதல்வராக (சட்டப்பேரவை பாஜக தலைவராக) தேவேந்திர ஃபட்னவீஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். எனவே, பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி நாளை ஆட்சியமைக்கவிருக்கிறது.

முதல்வராகத் தோ்வு செய்யப்பட்ட பிறகு கூட்டணித் தலைவா்களுடன் சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஃபட்னவீஸ் உரிமை கோரவிருக்கிறார்.

முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊரில் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவதால் இன்றைய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பாரா என்பதும் தெரியவில்லை.

பேரவைத் தேர்தல்..

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவு நவ. 23-ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்றது.

கூட்டணிக் கட்சிகளிடையே முதல்வா், துணை முதல்வா் பதவிகள், அமைச்சரவை இடங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் ஏற்பட்ட தாமதமே ஆட்சியமைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இறுதியாக பாஜகவை சோ்ந்தவா் முதல்வராவாா் என்று இப்போதைய முதல்வா் (பொறுப்பு) ஏக்நாத் ஷிண்டே அறிவித்திருந்தார். அந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.