
நடிகர் ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை படத்தின் அடுத்த பாடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவான திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.
நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தில் இடம்பெற்ற, ‘என்னை இழுக்கதடி’ பாடல் வெளியாகி பெரிதாக ஹிட் அடித்தது.
இதையும் படிக்க: விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா!
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கேட்க கேட்க விருந்தாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘லாவண்டர் நிறமே..’ நாளை (டிச.18) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.