அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமின் ‘போர்’: ரிலீஸ் தேதி!
நடிகர்கள் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள் போர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.


நடிகர் விக்ரம் நடித்த ‘டேவிட்’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறியப்பட்டவர் இயக்குநர் பிஜோய் நம்பியார். பின்னர் துலகர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். நவரசா, காலா ஆகிய இணையத்தொடர்களை இயக்கியுள்ளார்.
தற்போது அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராமை வைத்து தமிழில் போர் என்றும் ஹர்ஸ்வர்தன் ரனே, ஈஹான் பட்டை வைத்து ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சினிமாவிலிருந்து விலகுகிறார் நடிகர் விஜய்!
தமிழில் போர் என்றும் ஹிந்தியில் டங்கே எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றப் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
டி சீரிஸ் சார்பாக பூஷன் குமார் தயாரிக்க, டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். ஆக்ஷன் டிராமாவாக இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகிது. இந்நிலையில் படம் மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...