காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விக்ரம் 62 படத்தில் எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் விக்ரம் நடிக்கும் 62வது படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. 

Published On :


மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். நல்ல வரவேற்பினைப் பெற்ற பொன்னியின் செல்வனுக்கு பிறகு பா.இரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் விக்ரம். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘சித்தா’ கடந்தாண்டு செப்டம்பரில் வெளியானது. குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து  உருவாகியுள்ள ‘இப்படம்  திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. 

விக்ரம் 62 படத்தினை சித்தா இயக்குநர் எஸ்யூ அருண்குமார் இயக்கவிருக்கிறார். அதன் அற்விப்பு டீசர் முன்னமே வெளியாகி கவனம் பெற்றது. 

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Story image

வித்தியாசமான கதை சொல்லல் பாணி இருக்குமென நடிகர் எ.ஜே.சூர்யா இயக்குநரை புகழ்ந்துள்ளார். சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த அனைத்து படங்களும் (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி) ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.