’நடனம் என் மொழி..’: விடியோ வெளியிட்ட சிம்ரன்!

நடிகை சிம்ரன் நடன விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
’நடனம் என் மொழி..’: விடியோ வெளியிட்ட சிம்ரன்!

நடிகை சிம்ரன் ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, வாலி, பிரியமானவளே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் நாயகியாக வலம் வந்தார். 

பின், மெல்ல மெல்ல மார்க்கெட் இழந்தவர் வாரணம் ஆயிரம் படத்திற்குப் பின் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். அதன்பின், பேட்ட, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்து மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்திருந்திருக்கிறார். 

மகான், நம்பி விளைவு ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். சென்னையில், உணவக தொழிலையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 

இதையும் படிக்க: மகன்களுடன் நயன்தாரா!

இந்நிலையில், பிதாமகன் படத்தில் ‘சிவசக்தியோடு ஆடவா’ பாடலுக்கு நடனமாடியதை நினைப்படுத்தும் விதமாக அதே பாடல் வரிகளுக்கு நடனமாடும் விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com