முன்னாள் கணவருடன் இணைந்து பணியாற்ற தயார்: சோனியா அகர்வால்

முன்னாள் கணவருடன் இணைந்து பணியாற்ற தயார்: சோனியா அகர்வால்

புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் சோனியா அகர்வால்.
Published on

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2006-ல் வெளியான புதுப்பேட்டை இன்று வரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்றாக இருக்கிறது.

படம் வெளியானபோது வசூல் ரீதியாக தோல்விப்படமாக அமைந்தது. ஆனால், இப்போதும் விமர்சகர்கள் மத்தியில் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சமீபத்தில், செல்வராகவன் எக்ஸ் தளத்தில், “இந்த ஆண்டு புதுப்பேட்டை - 2 நிகழும் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். இதனால், புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், புதுப்பேட்டை படத்தில் நாயகியாக நடித்திருந்த சோனியா அகர்வால் புதுப்பேட்டை - 2 படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், நடிப்பது தன் தொழில் என்றும் முன்னாள் கணவருடன் இணைந்து பணியாற்றுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

செல்வராகவனும் சோனியா அகர்வாலும் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டர். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008-ல் விவாகரத்து பெற்றனர்.

முன்னாள் கணவருடன் இணைந்து பணியாற்ற தயார்: சோனியா அகர்வால்
ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com