துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் புதிய தொடர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதாவின் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

News image
நடிகை சுஜிதா.
Updated On :3 ஜனவரி 2024, 11:47 am

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதாவின் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சுஜிதா. தொடர்ந்து, நடிகர் சத்யராஜுடன் மந்திர புன்னகை படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அப்படத்தில் அவர் பேசும் 'லாலா லாலா' என்ற வசனம் இன்றளவும் பேசப்படுகிறது.

தொடர்ந்து பூவிழி வாசலிலே, மனிதன், காதல் பரிசு, பேர் சொல்லும் பிள்ளை என குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருந்தார்.

இவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். தொடர்ந்து கங்கா யமுனா சரஸ்வதி, கணவருக்காக, மருதாணி, பைரவி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடித்து பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார் சுஜிதா. மேலும், இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக விஜய் டிவி வழங்கிய விருதை இரு முறை பெற்றுள்ளார். 

இந்த நிலையில், இவர் கலைஞர் தொலைகாட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கெளரி என்ற தொடரில் இணைந்துள்ளார். மீண்டும் புதிய தொடரில் நடிக்கவுள்ள சுஜிதாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.