எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பிக் பாஸ்: மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய அடுத்த போட்டியாளர்?

பிக் பாஸ் வீட்டிலிருந்து மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய அடுத்த போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்

Published On :

பிக் பாஸ் வீட்டிலிருந்து மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய அடுத்த போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி  வரும் ஜன.14 அன்று நடைபெறுகிறது.

பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அதன்படி வினுஷா, அக்‌ஷயா, சரவணவிக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

சென்ற வாரம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா ரவி இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து, வார இறுதி எவிக்‌ஷனில் விசித்ரா வெளியேறினார்.

இந்த வார முதலில் நடைபெற்ற மிட் வீக் எவிக்‌ஷனில் விஜய் வர்மா வெளியேறிய நிலையில், அடுத்த மிட் வீக் எவிக்‌ஷனில் விஷ்ணு விஜய் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஷ்ணூ விஜய் டிக்கெட் டீ ஃபினாலேவில் டிக்கெட் பெற்று நேரடியாக இறுதி வாரத்துக்குள் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி  ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.