12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கங்குலி பயோபிக்கில் ஆயுஷ்மான் குரானா!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் பயோபிக்கில் ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Published On :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவருமான செளரவ் கங்குலி இந்தியக் கிரிக்கெட்டில் முக்கியமான ஆளுமை. அவரது கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருக்கிறது. 

கக்குலியின் பயோபிக்கில் ஆயுஷ்மான் குரானா நடிக்கவிருப்பதாக கடந்தாண்டில் இருந்து தகவல்கள் வெளியின நிலையில் தற்போது இது மேலும் வலுவடைந்துள்ளது. 

முதலில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்குவதாக தகவல்கள் வெளியானது. தற்போது, விக்ரமாதித்ய மோத்வானி இயக்கவிருக்கிறார். எல்யூவி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தினை தயாரிக்கிறார்கள்.

Story image

இந்தப் படத்துக்காக ஆயுஷ்மான் குரானா பல மாதங்களாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார். படப்பிடிப்பு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். படம் இந்தாண்டு இறுதியில் வெளிவருமென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புதுமையான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா. புதுமையான படங்கள் வசூலிலும் சாதனை படைப்பதால் ஆயுஷ்மான் குரானா இளஞர்களுக்கான அடையாளமாக திகழ்கிறார். இவரது பல படங்களை தமிழில் ரீமேக் செய்து நடித்துள்ளார்கள். அதில் நெஞ்சுக்கு நீதி,  வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.