/

12 கே தரத்தில் ஹே ராம்!

நடிகர் கமல்ஹாசன் எழுதி, இயக்கிய ஹே ராம் திரைப்படம் தொழில்நுட்ப மெருகேற்றல் செய்யப்பட்டு வருகிறது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:19 pm

DIN

நடிகர் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படமான ஹே ராம் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக தோல்விப் படமானாலும் இன்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. காரணம், காந்தியைக் கொலை செய்யச் சென்ற சாகேத் ராம் என்பவர் அடையும் மன மாற்றங்களும் மத நல்லிணக்கத்தையும் திரைக்கதையில் திறமையாகக் கையாளப்பட்டிருந்தன.

இதில் ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி என பலர் நடித்திருப்பார்கள். இளையராஜாவின் இசை இப்படத்தின் அழகியலுக்கு மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்தது. 

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை யூடியூபில் ஹெச்டி தரத்தில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இப்படம் 12 கே (12k resolution) தரத்தில் டிஜிட்டல் மெருகேற்றல் செய்யப்பட உள்ளது.

Story image

இதுவே, உலகின் முதல் 12கே டிஜிட்டல் செய்யப்பட்ட படம் என்கிற குறிப்பும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.