/

தனுஷ் 51 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்!

நடிகர் தனுஷ் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் இணைந்துள்ளார்.  

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:13 pm

DIN

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளது.

இப்படத்திற்குப் பின் தனுஷ் இயக்கி, நடித்த அவரின் 50-வது படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள அவரது 51-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. 

Story image

இப்படத்தை இயக்குநர் சேகர் கமூலா இயக்குகிறார். நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியப் படமாக இது உருவாகிறது. 

டிஎன்எஸ் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

Story image

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் ஜிம் சார்ப் இணைந்துள்ளார். இவர் நீரஜ், பத்மாவதி, சஞ்சு, கங்குபாய் கதியவாடி ஆகிய படங்களில் நடிப்பில் அசத்தியுள்ளார்.

Story image

51வது எம்மி சர்வதேச விருதுக்கு சிறந்த நடிகருக்கான போட்டியில் பரிந்துரைக்கப்பட்டார். ஐஐஎஃப்ஏ-இன் விருதை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.