மாதவனுடன் நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரிய ஹிட் அடித்தது. பின்னர் கடைசியாக தமிழில் 2014இல் விஞ்ஞானி படத்தில் நடிய்த்திருந்தார். பின்னர் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது மீண்டும் தமிழில் நடிக்கிறார். நயன்தாராவின் டெஸ்ட் படத்தில் மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் நடிகர்கள் மாதவன் மற்றும் சித்தார்த்தும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இதையும் படிக்க: கங்குவா படத்தின் பாபி தியோல் போஸ்டர்!
ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பவதாரிணியின் பாடல்கள்!
பத்மா எனும் கதாபாத்திரம் உங்கள் மனதில் பல வருடங்களுக்கு இடம் பிடிக்குமென நடிகை மீரா ஜாஸ்மின் தெரிவித்துள்ளார்.