பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

‘கூலி’ படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்!

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன் கூலி படத்தில் இணைந்துள்ளார்.

கிரிஸ் கங்காதரன். லோகேஷ் கனகராஜ்.

Published On :

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது.

தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ (கூலி) படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டெஸ்ட் லுக்கினை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் படத்திற்கான ஒளிப்பதிவாளரை அறிமுகப்படுத்தியுள்ளார். மலையாளத்தில் தேசிய விருது (ஜல்லிக்கட்டு) பெற்ற ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன் படத்தில் இணைந்துள்ளார்.

விஜய்யின் சர்கார், கமலின் விக்ரம் படத்துக்கும் இவர்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த (ஜூலை) மாதத்தில் சென்னை அல்லது ஹைதராபாத்தில் துவங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.