/

இந்தியன் 2 திரைப்படம் 3 மணி நேரமா? தணிக்கைச் சான்றிதழ் விவரம்!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவரம் வெளியாகியுள்ளது.

News image
இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல், ஷங்கர்.
Updated On :5 ஜூலை 2024, 7:49 am

DIN

இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.


இந்தியன் - 2 படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்களின் விடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், இந்தியன் -2 படத்தின் தணிக்கைச் சான்றிதழ் யு/ஏ வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் படம் 3 மணி நேரம் 4 விநாடிகள் கொண்டுள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சில வார்த்தைகள் மியூட் (ஒலி நீக்கம்), சில காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் நீக்கப்படவில்லை. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தணிக்கைச் சான்றிதழ் விவரம்

தணிக்கைச் சான்றிதழ் விவரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.