குத்து பாடலுக்கு நடனமாடிய அஜித்!
நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்திற்காக குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார்.


நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்திற்காக குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்துக்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
குட் பேட் அக்லியின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் சென்றுள்ளார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் அஜித், குத்து பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியுள்ளார்.
மேலும், குட் பேட் அக்லி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து தென் அமெரிக்காவில் சில நாள்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...