உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கேஜிஎஃப் - 3? வைரலாகும் அஜித் - பிரசாந்த் நீல் கூட்டணி தகவல்!

Published On :

இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப், சலார் ஆகிய படங்கள் பிரம்மாண்டமாக உருவானதுடன் மிகப்பெரிய வசூலையும் பெற்றன. 

சலார் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் துவங்க உள்ளது. இதற்கிடையே, பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

கேஜிஎஃப் படத்திற்குப் பின்பே அஜித்துடன் பிரசாந்த் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சலார் மற்றும் துணிவு படத்தால் இருவரும் வேறு படங்களில் கவனம் செலுத்தினர். தற்போது, அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சலார் - 2 திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பின் இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் அஜித்தின் 64-வது படத்தை இயக்குகிறார் என்றும் அது கேஜிஎஃப் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.