45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காவியத் தலைவனில் நடித்திருக்க வேண்டிய நடிகர்கள் இவர்களா?

இயக்குநர் வசந்தபாலன் காவியத் தலைவன் படத்தில் நடித்திருக்க வேண்டிய நடிகர்கள் குறித்து பேசியுள்ளார்.

News image
Updated On :30 ஜூலை 2024, 10:31 am

DIN

இயக்குநர் வசந்தபாலன் காவியத் தலைவன் படத்தில் நடித்திருக்க வேண்டிய நடிகர்கள் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காவியத் தலைவன். நடிகர்கள் சித்தார்த், பிருத்விராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் வணிக ரீதியான தோல்விப்படமாக அமைந்தாலும் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

மேடை நாடகத்தை மையமாக வைத்து படத்தின் கதையை வசந்தபாலன் உருவாக்கியிருந்தார்.

காவியத் தலைவன் காட்சி.

காவியத் தலைவன் காட்சி.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய வசந்தபாலன், “காவியத் தலைவன் படத்தை இயக்க முடிவெடுத்ததும் இதில் நடிக்கக் கூடியவர்களும் நல்ல நடிப்பாற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காக, நடிகர்கள் சூர்யா மற்றும் விக்ரமை அணுகினேன். இருவரும் நடிக்க ஒப்புக்கொண்டனர்.

ஆனால், வியாபாரக் காரணங்களால் அவர்கள் இணையவில்லை. பின், சூர்யா கதாபாத்திரத்தில் சித்தார்த்தும் விக்ரம் கதாபாத்திரத்தில் பிருத்விராஜும் நடித்தனர். நாயகியாக நயன்தாரா நடிக்க வேண்டியது. அவருக்குப் பதிலாக வேதிகா நடித்தார்.” எனக் கூறியுள்ளார்.

நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யா.

நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யா.

ஒருவேளை இப்படத்தில் சூர்யாவும் விக்ரமும் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.