உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (மே 31) சாமி தரிசனம் செய்தார்.
வேட்டையன் படப்பிடிப்பை முடித்து ஓய்வில் இருக்கும் ரஜினி, கூலி படப்பிடிப்பிற்குத் தயாராகி வருகிறார்.
கடந்த மே 29-ல் சென்னையிலிருந்து இமயமலைக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி, “ஒவ்வொரு ஆண்டும் இமயமலை செல்கிறேன். இந்த முறையும் பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகைக்குச் செல்கிறேன்” என செய்தியாளர்களுடன் பேசும் போது தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த ஆண்டுதோறும் கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் இந்தப் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
தற்போது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரஜினி - 173 இயக்குநர் யார்?

அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது- ஜன நாயகன் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினி

ரஜினி - 173 படப்பிடிப்பு அப்டேட்!
சார்தாம் யாத்திரை: 47 கோயில்களில் ஹிந்து அல்லாதோர் நுழைய தடை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


