
இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் இருவருக்கும் தனது வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார்.
தனக்கிருக்கும் மூன்று சகோதரர்களில் அண்ணன் இளையராஜாவுக்கும், தம்பி மணிரத்னத்துக்கும் இன்று பிறந்தநாள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பதிவில், “இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு.
மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்.
பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க” என்று கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.