மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

வெளிநாட்டில் ‘டாக்ஸிக்’ படப்பிடிப்பு!

பிரபல கன்னட நடிகர் யஷ், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு அப்டேட்.

Published On :

கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்கிறார். டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

நடிகர் யஷ்ஷும் இணை தயாரிப்பாளராக களமிறங்குகிறார். இயக்குநர் கீது கோகன்தாஸ் லையர்ஸ் டைஸ், மூத்தோன் படங்களை இயக்கி பாராட்டுக்களைப் பெற்றவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீது, தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் டின்னு என்கிற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரிட்டனில் 150- 200 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீக்கி பிளைண்டர்ஸ் படத்தினைப் போல இந்தப் படம் உருவாவதாகவும் நயன்தாரா யஷ்ஷுன் சகோதரியாகவும் கியாரா அத்வானி நாயகியாகவும் ஹூமா குரேஷி வில்லியாகவும் நடிக்கவிருக்கிறார்கள்.

இந்தப்படம் 2025ஆம் ஆண்டு ஏப்.10இல் வெளியாகவுள்ளது. கேஜிஎஃப் 2 படத்தின் 3ஆவது வருடத்தின் வெளியீட்டு நாளில் இதனை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். தற்போது இந்தியாவில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் ஆங்கில ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.