நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

டாக்ஸிக் முதல் நாள் வசூல்! ஷாருக்கானை முந்திய யஷ்!

டாக்ஸிக் முதல் நாள் வசூல் குறித்து...

நடிகர் யஷ்

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:43 pm IST

டாக்ஸிக் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள திரைப்படம் டாக்ஸிக். 1947-களில் கோவாவை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரைப்படமாக இது உருவாகியிருந்தது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று (ஆக. 26) திரையரங்குகளில் வெளியானது.

நடிகைகள் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் என பெரிய நடிகர்கள் பட்டாளமே இருந்ததால் கண்டிப்பாக ஹிட் வாய்ப்பு பெரிதாக இருக்கும் என நினைக்கப்பட்டது.

ஆனால், 3 மணி நேரத்துக்கும் மேல் ஓடக்கூடிய இப்படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைக்கதை மிக மோசமாக இருப்பதாகவும் எந்தக் காட்சியும் சரியாக எழுதப்படவில்லை என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்விப்படமாகும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், முதல் நாள் வசூலாக இப்படம் உலளவில் ரூ. 140 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவிலேயே இப்படம் ரூ. 101 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதனால், நடிகர் ஷாருக்கானின் ஜவான் முதல்நாள் இந்திய வசூலை நடிகர் யஷ் முந்தியிருக்கிறார்.

Information regarding the first-day box office collection of the movie 'Toxic' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.