
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மழை பிடிக்காத மனிதன்.
விஜய் மில்டன் கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
10 என்றதுக்குள்ள, கோலி சோடா படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் மில்டன் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் ‘தீரா மழை’ , இசையமைப்பாளர் ஹரி டபுசியாவின் இசையமைப்பில் ‘தேடியே போறேன்’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இந்த நிலையில், மழை பிடிக்காத மனிதன் படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளனர். மேலும், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.