கல்கி 2898: பிரபாஸின் கதாபாத்திரம் அறிவிப்பு!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'கல்கி 2898 ஏடி’ படத்தில் பிரபாஸின் கதாபாத்திர பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.


தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இது பிரபாஸின் 23வது படம். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார்.
ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தப் படம் வைஜெயந்தி மூவிஸின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வடிவிலான துப்பாகியை படக்குழு வடிவமைத்துள்ளது. அதன் தயாரிப்பு குறித்து விடியோவை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
படம் வரும் மே 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...