மீண்டும் வருகிறது சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!

மீண்டும் வருகிறது சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!

நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் புதுமையானதாகவே இருக்கும். அந்தவகையில் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை , ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், முந்தைய சீசன்களை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகியதாக அறிவித்தது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியின் அடுத்த சீசன் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளதால், இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மீண்டும் வருகிறது சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!
வந்தியத்தேவனுடன் பிஎஸ் -2 குழு! இது பொன்னியின் செல்வனல்ல, பாண்டியன் ஸ்டோர்ஸ் -2

அது இது எது நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி, அதுவும் இந்நிகழ்ச்சியில் வரும் 'சிரிச்சா போச்சு' சுற்றுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் அறிவிப்பு எப்போது வரும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, அது இது எது நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியிருப்பது சற்று ஆறுதலை அளித்துள்ளது.

அது இது எது நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்களை இந்நிகழ்ச்சி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com