ரோமியோ டிரைலர்!

விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ரோமியோ டிரைலர்!
DOTCOM

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் ஆகிய படங்கள் சுமாரான வெற்றிகளைப் பெற்றன. 

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ என்கிற காதல் படமொன்றில் நடித்து வருகிறார். நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

திருமணத்தில் விருப்பமில்லாத மனைவியைக் காதலிக்கும் கணவனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவான ரோமியோ கோடை வெளியீடாக திரைக்கு வருகிறது.

ரோமியோ டிரைலர்!
லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ பாடல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com