பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

டிக்கெட் முன்பதிவில் அசத்தும் ஆடு ஜீவிதம்!

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ஆடு ஜீவிதம் திரைப்படம் வசூல் சாதனைகளைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

News image
- DOTCOM
Updated On :26 மார்ச் 2024, 10:38 am

DIN

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜுன் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.

பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வருகிற மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

தற்போது, இப்படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, படக்குழுவினர் நேர்காணல்களில் பங்கேற்று கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, கேரளத்தில் முதல்நாள் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதுடன் அதிவேகமாக டிக்கெட்களையும் முன்பதிவு செய்து வருகிறார்கள். முதல்முறையாக, நடிகர் பிருத்விராஜ் படத்திலேயே முன்பதிவு மூலம் ரூ.2 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம் என்கிற பெருமையையும் ஆடு ஜீவிதம் அடைந்திருக்கிறது.

Story image

மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளதால் வசூலில் பெரிய சாதனையைப் படைக்கும் என்றே கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.