தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்போல் வால்ட் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்!ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு!

நடிகர் சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DOTCOM

Published On :

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இதில், த்ரிஷா, கமல்ஹாசன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Story image

இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நடிகர் துல்கர் சல்மான் தன் அடுத்தடுத்த பட வேலைகளில் தீவிரம் காட்டி வருவதால், தக் லைஃப் படத்திலிருந்து விலகினார். துல்கர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற கேள்வி எழுந்தது.

தற்போது, இப்படத்தில் நடிகர் சிம்பு இணைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிம்பு இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நாயகனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.