விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சித்தார்த் - அதிதிக்குத் திருமணம்!

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் திருமணம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
- DOTCOM
Updated On :27 மார்ச் 2024, 7:39 am

DIN

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ படத்தின் கதாநாயகனாக நடித்தார். முக்கியமான நடிகராக வலம் வந்தவர் அடுத்தடுத்த தோல்விப் படங்களைக் கொடுத்ததால் மார்க்கெட் இழந்தார்.

ஆனால், சித்தா படத்தின் வெற்றிக்குப் பின் நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்தெடுத்துள்ளாராம்.

இதற்கிடையே, சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹைதரியைக் காதலித்து வந்தார். இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இன்ஸ்டாகிராமில் இணைந்து பல ரீல்ஸ்களைச் செய்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த, புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Story image

அதிதி ராவ் ஹைதரி தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.