தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

மொரீஷியஸ் தீவுக்கு யுவன்சங்கர் ராஜா சென்றுள்ளார்.

News image
Updated On :3 மே 2024, 2:01 pm

DIN

1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர்.

இதனிடையே, கூலி டீசரில் தன் இசை பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது விமர்சனத்துக்குள்ளானது.

Story image

கோடையை கொண்டாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா மொரீஷியஸ் தீவுக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக இளையராஜா சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலானது.

இந்த நிலையில், இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜாவும் மொரீஷியஸ் தீவுக்கு சென்றுள்ளார். மொரீஷியஸ் தீவில் தனது மகன் யுவன்சங்கர் ராஜாவுக்கு, உணவு ஊட்டும் புகைப்படத்தை இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.