டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காதது குறித்து நடிகை ஜோதிகா விளக்கமளித்துள்ளார்.

Published On :

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி தங்களது குடும்பத்துடன் வாக்களித்துள்ளார்கள். ஆனால் இதில் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா பங்கேற்கவில்லை.

அந்தச் சமயத்தில் நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேபாளுக்கு சுற்றுலா சென்றுள்ள விடியோ புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தது அந்த நேரத்தில் விவாதத்துக்கு உள்ளானது.

ஜோதிகா தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். சைத்தான் பட வெற்றிக்குப் பிறகு பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. மேலும் ஹிந்தியில் இணையத்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்ரீகாந்த்’ என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பு தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. இதில் செய்தியாளர் சந்திப்பில், “சமூக பொறுப்பு குறித்து பேசுகிறீர்கள்.. தேர்தலில் நீங்கள் வாக்களிக்கவில்லை என பலரும் விமர்சித்தார்கள்.. அதற்கு உங்கள் பதில் என்ன?" என கேள்வி எழுப்பினர்.

செய்தியாளரின் கேள்விக்கு நடிகை ஜோதிகா, “வருடத்துக்கு ஒரு முறை வாக்களிக்கிறோம். (ஐந்து எனக் குறுக்கிட்டு செய்தியாளர் சொன்னவுடன்) ஆமாம் மன்னிக்கவும், 5 வருடத்துக்கு ஒரு முறை வாக்களிக்கிறோம். சில நேரங்களில் வேலை காரணமாக நாம் வெளியூர்களில்/ வெளிநாடுகளில் இருக்க வேண்டியிருக்கிறது. அது எங்களது தனிப்பட்ட உரிமை. அதற்கு மதிப்பளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.