ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான ஆவேஷம் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஃபஹத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது.

பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (ஃபகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!
சல்மான் கான் படத்தில் ராஷ்மிகா!

இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றது. குறிப்பாக, இலுமினாட்டி பாடலின் இசையும் வரிகளும் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதுவே, நடிகர் ஃபஹத் ஃபாசிலின் அதிகம் வசூலித்த படமாகும்.

இந்நிலையில் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளிலும் அசத்திக் கொண்டிருக்கும் ஆவேஷம் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!
ஃபகத் ஃபாசிலின் விருந்து: ஆவேஷம் - திரை விமர்சனம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com