பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தீபாவளி: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!‘தவெகவின் ரெய்டுக்கு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது’ - மு.க. ஸ்டாலின்‘பாசிசத்தில் பாஜகவை மிஞ்சும் தவெக அரசு’ - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!‘முத்துநகரத்தை கொலை நகரமாக மாற்றிய தவெக அரசு’ - கனிமொழி கண்டனம்!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

ஃபஹத் ஃபாசில் உடன் பணியாற்ற விரும்பும் இம்தியாஸ் அலி!

பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி அளித்த பேட்டி குறித்து...

Fahadh Faasil, Imtiaz Ali

ஃபஹத் ஃபாசில், இம்தியாஸ் அலி - படங்கள்: முகநூல்/ ஃபஹத் ஃபாசில், இம்தியாஸ் அலி

Updated On :

பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி பிடிஐக்கு அளித்த பேட்டியில், “ஃபஹத் ஃபாசில் உடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஹிந்தியில் ராக்ஸ்டார், ஹைவே, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர் இயக்குநர் இம்தியாஸ் அலி. காதல் படங்களுக்கென மிகவும் புகழ்பெற்றவர் என்பது கவனிக்கத்தக்கது.

கடைசியாக இம்தியாஸ் அலி இயக்கத்தில் கடந்த ஜூனில் மெய்ன் வாபஸ் ஆவுங்கா என்ற படம் வெளியானது. நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் சுமார் ரூ.100 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ஏக்தா கபூர் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் திரைப்பட விழாவில் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் உடன் பணியாற்ற நான் விரும்பினேன். ‘தி இடியட் ஆஃப் இஸ்தான்புல்’ படம் எடுக்க முடியாமல் போனது. நாங்கள் இப்போதும் தொடர்பில்தான் இருக்கிறோம். இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறோம்.

ஒருமுறையாவது அவருடன் பணியாற்ற வேண்டுமென நினைக்கிறேன். நான் தயாரிக்கும் படத்தில் சாரா அர்ஜுன் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதில் உண்மை இல்லை என்றார்.

இம்தியாஸ் அலியின் சகோதரர் ஹீர் ரஞ்ஜா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை இம்தியாஸ் அலி தயாரிக்கிறார். 2018ல் வெளியாகி வரவேற்பைப் பெறாத ’லைலா மஜ்னு’ என்ற படம் 2024ல் மறுவெளியீட்டில் அசத்தியது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் ஹீர் ரஞ்ஜா உருவாகிவருகிறது.

Summary

Imtiaz Ali hopes to collaborate with Fahadh Faasil, says previous attempt did not work out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.