
பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, நயன்தாராவின் இறைவன், அன்னபூரணி ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
நயன்தாரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு யோகிபாபு இப்படத்தில் நடிக்கிறார்.
இப்படத்துக்கு மண்ணாங்கட்டி எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபல யூடியூப் சேனலில் புகழ்பெற்ற டூட் விக்கி இப்படத்தை எழுதி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடைவடைந்துள்ளது. இதனைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Shoot wrapped for Lady Superstar #Nayanthara's next, #MannangattiSince1960.
— Prince Pictures (@Prince_Pictures) May 9, 2024
Produced by @Prince_Pictures. @lakku76 @venkatavmedia @dudevicky_dir @iYogiBabu @RDRajasekar @rseanroldan @MilanFern30 @ganesh_madan @itshravanthi @paalpandicinema @KannadasanDKD @SonyMusicSouth⦠pic.twitter.com/eeiHhJjagK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









