மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. தமிழில் களரி படத்தில் அறிமுகமாயிருந்தார்.
நடிகர் தனுஷ் உடன் நடித்த வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் 2022இல் பீம்லா நாயக் படத்தில் அறிமுகமானார். விரூபாக்ஷா திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது. இவர் சமீபத்தில் பெண்களுக்காக ‘ஆதி சக்தி’ என்ற அமைப்பை தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் நடிப்பது கடினமாக இருந்தது. காரணம் மொழி அல்ல மேக்கப் (அலங்காரம்) எனக் கூறியுள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “தெலுங்கில் அலங்காரம் செய்துகொண்டு நடிப்பது எனக்கு கடினமாக இருந்தது. மலையாளத்தில் மிகவும் இயற்கையான அலங்காரமே தேவைப்படுவதால் நடிக்க எளிதாக இருக்கும். மேலும் மலையாளத்தில் சுதந்திரமாக இருக்கும். தெலுங்கில் நமது அழகு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியுள்ளது. அது எனது வசதிக்கு எதிரான மனநிலையை கொண்டது.

வசனத்தை மனப்பாடம் செய்துகொண்டிருக்கும்போது அல்லது படப்பிடிப்பின்போது அலங்காரம் செய்பவர்களை மட்டுமே அனுமதிப்பேன். அழகாக இல்லையென்றால் சேலை நிபுணர் படப்பிடிப்புக்கு இடையே இடையூறு செய்வார். இது கேட்பதற்கு சிறுபிள்ளைதனமாக இருந்தாலும் எனக்கு எளிதானது இல்லை. எப்போதும் எனது முகத்தில்,தோலில் எதுவோ இருப்பதுபோலவே இருக்கிறது.
மலையாளத்தில் அலங்காரங்கள் இல்லாமலும் கூந்தலை முடியாமலும் நடிக்கலாம் என்றார்.
மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்திலும் தெலுங்கில் ஸ்வயம்பு படத்திலும் பெயரிடப்படாத நகைச்சுவை படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
Throw Back HD Pics #Virupaksha ð¬
— Kolly SODA ð¾ (@Kollysodaa) February 28, 2024
Traditional Beauty #SamyukthaMenon Ma'am Snaps from the Movie ð¥#Samyuktha #Vaathi #Mallu #MalayalamActress pic.twitter.com/HEWU54Xnv1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே இரு வேறு இடங்களில் குடிநீா் கேட்டு மறியல்
மசோதாக்கள் மாறலாம்; வேறு எதுவும் மாறப் போவதில்லை: கார்கே

இரு வேறு சாலை விபத்துகளில் 6 போ் உயிரிழப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன சிரமம் உள்ளது?
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK





