
தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என பலருக்கும் ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர், லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றன.
தமிழில் தமன்னா நடித்த சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 2 ஹிந்திப் படங்கள், ஒரு தெலுங்குப் படமான ‘ஒடேலா 2’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “நண்பர்கள் என்னை எங்கு கூப்பிட்டாலும் வருவேன் எனக்கூறும் நான், உண்மையில் இரவு 8 மணிக்குமேல் அப்படி இருப்பதில்லை என்பதுதான் எனது மோசமான பண்புகளில் ஒன்று. இதில் என்ன உணவு, அப்போதைய காலநிலை, பார்க்கிங் சூழ்நிலை, நான் எவ்வளவு களைப்பாக இருக்கிறேன் என்பதைப் பொருத்தது” எனக் கூறியுள்ள பதிவை பகிர்ந்து ஆமாம் என்ற ஸ்டிக்கரை பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.