/

‘ஸ்டார்’ திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகள்!

நடிகர் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :11 மே 2024, 5:53 pm IST

சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து டாடா படத்தின் மூலம் சினிமாவில் கவின் பிரபலமடைந்தார்.பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ். போஹன்கர் நடித்துள்ளார்.

ஸ்டார் திரைப்படம் நேற்று (மே.10) வெளியான நிலையில் சென்னையில் திரையரங்கு ஒன்றில் முதல்நாள் முதல்காட்சியை பார்க்க இயக்குநர் இளன், நடிகர் கவின் ஆகியோர் சென்றனர். இதில் நடிகர் கவினுக்கு ரசிகர்கள் பெருத்த ஆரவாரமும், மதிப்பும் கொடுத்த அதேவேளையில் கூட்ட நெரிசலிலும் சிக்க வைத்தனர்.

இந்நிலையில் படத்துக்கு நல்ல வரவேற்பு வருவதால் தமிழகத்தில் 180க்கும் அதிமான காட்சிகள் கூடுதலாக ஒதுக்கப்படுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.