மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

நடிகர் சூர்யா படத்துக்கு முதல்முறையாக பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளார்.

Published On :

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தள்ளிப்போகுமென சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘லவ் லாஃப்டர் வார்' என்ற வகைமையில் படம் உருவாக உள்ளதாகக் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணம் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கார்த்திம் சுப்புராஜ் அண்ணா எப்போதும் போல சம்பவமா ஒன்னு பண்ணுங்க” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவினை சந்தோஷ் நாராயணன் லைக் செய்துள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு இவர்தான் ஆஸ்தான இசையமைப்பாளர். அதனால் சூர்யா ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

இதுவரை சூர்யா படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.