தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்!

ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிடவுள்ளது பற்றி...

News image

ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளிளியிடவுள்ளார். - படம் - எக்ஸ்

Updated On :28 ஜூலை 2026, 6:20 pm IST

ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிடவுள்ளதாக படக்குழு இன்று (ஜூலை 28) அறிவித்துள்ளது.

இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ரேனிகுண்டா”. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு மற்றும் ஷாமி திலகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் பன்னீர் செல்வமே தயாரிக்கும் இப்படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை (ஜூலை 29) வெளியாகவுள்ள நிலையில் அதனை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிடுவார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் பாடலை கவிஞர் யுகபாரதி எழுத, பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The film crew announced today (July 28) that music composer G.V. Prakash will release the first song from the movie Renigunta 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.