
நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக அவர் நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா, வீரசிம்மா ரெட்டி, சலார் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘இனிமேல்’ ஆல்பத்தில் நடித்திருந்தார்.
மேலும், சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் தன் காதலரான ஷாந்தனு ஹசாரிகாவைப் பிரிந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகை ஒருவர், தன் தந்தையின் அறையிலிருந்து எடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹாசனின் சிறுவயது புகைப்படத்தைப் பதிவிட்டார். அதில், சிறுமி ஸ்ருதி தன் தந்தை கமல்ஹாசன் மற்றும் தாய் சரிகாவுடன் இருக்கிறார்.
இந்தப் பதிவைப் பார்த்த ஸ்ருதிஹாசன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.